EAT WELL LIVE WELL BE WELL

CHUTNEY /SIDE DISH FOR ALL VADA AND BAJI

சட்னி 

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் : 2 
தக்காளி : 2
வர மிளகாய் : 3
பூண்டு : 4 பல் 
தேங்காய் : சிறிதளவு 
புளி  : சிறிதளவு ( இரண்டு விதை )
கறிவேப்பிலை : சிறிதளவு 
ஜீரகம் : 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு : ஒரு டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு 


செய்முறை :

  1. ஒரு கடாயை அடுப்பில் பற்ற வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ,ஜீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பூண்டு வதங்கியவுடன் , நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து , நன்கு முருகளாக வதக்கவும் .(இந்த சட்னிக்கு வெங்காயம் நன்கு வன்தங்குவதால் தாழ் சுவையே கிடைக்கும் )
  3. வெங்காயம் வதங்கியவுடன் , நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு தக்காளி தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும் .
  4. இவற்றுடன் தேங்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு பிரட்டியவுடன், அடுப்பை நிறுத்தி விட்டு. கலவை நன்கு ஆறியவுடன் புளியையும் சேர்த்து , தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்து , சிறிது கடுகு, கறிவேப்பிலை , தாளித்து கொட்டி , சுட சுட பஜ்ஜி அல்லது போண்டா அல்லது வடையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

STEP BY STEP PICTURES :



  1. பூண்டு ,கறிவேப்பிலை ,வெங்காயம்,வர மிளகாய் ஆகியவற்றை வதக்கல் 
  2. தக்காளி சேர்த்து வதக்குதல் 
  3. இறுதியாக நன்கு அரைத்து சட்னி தயார் செய்தல் 
  4.  


No comments:

Post a Comment

@templatesyard