ரசம்
தேவையான பொருட்கள் :
புளி கரைசல் : 1 கப்
தக்காளி : 2
சீரகம் : 2 டேபிள் ஸ்பூண்
மிளகு : 1 டேபிள் ஸ்பூன்
மல்லி : 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் : 3
பூண்டு :ஒரு கட்டை (10 பல் )
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் : 1/4 ஸ்பூன்
பெருங்கயத்தூள் : சிறிது.
உப்பு எண்ணெய், கடுகு : சிறிது
செய்முறை :
ரசத்திற்கான மசாலா அரைப்பதற்கு சீரகம்,மிளகு,மல்லி,கறிவேப்பிலை,வரமிளகாய் 2 ,பூண்டு ஆகியவற்றை, அரைத்து இது போல் எடுத்து கொள்ளவும்.(தண்ணீர் சேர்த்தாமல் )
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ,காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்தவும்.இவற்றில் பெருங்காயத்தூள் சிறிது சேர்க்கவும்.
- இவற்றில் அரைத்த மசாலா துள் சேர்த்து வதக்கவும் .
- தக்காளியை இது போல் அரைத்து வைத்து கொள்ளவும்.இதனையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- இவற்றுடன் உப்பு சேர்த்து புலி கரைசல், மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான சூட்டில் நுரை கட்டி பொங்கும் வரை மட்டும் வைக்கவும்.
- ரசம் கொதித்தால் நன்றாக இருக்காது.
- கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ரசம் தயார்.
No comments:
Post a Comment