தயிர் சாதம் (LUNCH BOX RECIPE)
தேவையான பொருட்கள்:
- சாதம் : வேகவைத்து ( 1 கப் )
- தயிர் : 1 டேபிள் ஸ்பூன்
- பால் : 1 கப் (உடனடியாக சாப்பிட்ட வேண்டுமெனில் பால் தேவை இல்லை ,பாலுக்கு பதில் 1 கப் தயிர் எடுத்து கொள்ளவும் )
- இன்ஜி : 1 துண்டு
- பச்சை மிளகாய் : 2
- கறிவேப்பிலை : சிறிதளவு
- கடுகு, எண்ணெய் : தேவையான அளவு
- கொத்தமல்லி தழை : சிறிதளவு
- உப்பு
செய்முறை :
- சாதம் நன்கு குழைத்து கொள்ள வேண்டும் .
- அதில் 1கப் பால் காய்ச்சி அதில் சேர்த்து நன்கு கிளறவும்.அல்லது அப்போதே சாப்பிட 1 கப் தயிரை ஆறிய சாதத்தில் சேர்த்து நன்கு கிளறவும்.சுடு சாதத்தில் தயிர் சேர்த்த கூடாது .
- உப்பு சேர்த்தி கொள்ளவும் தேவைக்கேற்ற அளவு.
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்தி காய்ந்த வுடன்,கடுகு,கறிவேப்பிலை,இன்ஜி,பச்சை மிளகாய்,சேர்த்தி நன்கு தாளித்து, கலக்கிய தயிர் அல்லது பால் சாதத்தில் சேர்க்கவும் .
- lunch box ல் pack செய்யும் போது பால் சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்தி,கிளறி pack செய்யவும்...
- அப்போதே சாப்பிட தயிர் சாதத்தில் சிறிது கொத்தமல்லி சேர்த்தி பரிமாறினாள் சுவையான தயிர் சாதம் தயார் .
உடனடி தயிர் சாதம் செய்வதற்கான படம் :
குழைத்த சாதம்
1 கப் தயிர்
தயிர் சேர்த்து கலந்த சாதம்
கொத்தமல்லி தழை,தாளிப்பு,சேர்த்தி கலக்கிய தயிர் சாதம் .
No comments:
Post a Comment