EAT WELL LIVE WELL BE WELL

MIRCHI BAJI / MILAGAI BAJI

மிளகாய் பஜ்ஜி 


தேவையான பொருட்கள் :

பஜ்ஜி மிளகாய் : 6 
கடலை மாவு : 1 கப் 
அரிசி மாவு : 1/4 கப் 
பெருங்காயப்பொடி : சிறிதளவு 
மிளகாய் தூள் : 1 முதல்  1.5 டேபிள் ஸ்பூன் 
உப்பு : தேவையான அளவு 
சமையல் சோடா உப்பு : சிறிதளவு (தேவைப்பட்டால் )
பொரித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெய் 


செய்முறை :

  1. பஜ்ஜி மிளகாயை இரண்டாக கீறி உள்ளிருக்கும் விதையை நீக்கி கொள்ளவும் .சுத்தம் செய்த மிளகாயை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வைக்கவும் , பின்பு எடுத்து வடிகட்டி,ஈரப்பதம் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
  2.  பஜ்ஜி கலவைக்காக மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயப்பொடி,சோடா உப்பு சேர்த்து கலக்கி, சிறிது தண்ணீர் சேர்த்தி கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும் .அதிக தண்ணீர் சேர்க்க கூடாது.
  3. எடுத்து வைத்த மிளகாயை ஒவொன்றாக மாவில் பிரட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, நன்கு சிவந்து எடுத்தால் ,ஒரு துளி எண்ணெய் இல்லாமல் மிளகாய் பஜ்ஜி தயார் .

No comments:

Post a Comment

@templatesyard