வெங்காய பக்கோடா
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் : 2
பச்சை மிளகாய் : 2
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி தழை : சிறிதளவு
வரமிளகாய் தூள் : 1 முதல் 1.5 டேபிள் ஸ்பூன்
பெருங்காய தூள் : சிறிது
சோம்பு : 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு : 1 கப்
அரிசி மாவு : 1/2 கப்
உப்பு : தேவையான அளவு
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை :
- பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் , மெல்லிசாக வெட்டி கொள்ள வேண்டும் .
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் ,துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை,ஆகியவற்றை சேர்த்து ,
- அதனுடன் வரமிளகாய் தூள்,உப்பு,சோம்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
- அவற்றுடன் கடலை மாவு , அரிசி மாவு ஆகிய வற்றை சேர்த்து பிசறவும் ,தண்ணீர் சேர்க்க கூடாது, வெங்கத்திலுள்ள தண்ணீரே போதுமானது. உப்பு சரி பார்த்து கொள்ளவும்.(தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்தி கொள்ளலாம் ).
- அவற்றில் சிறிது கையில் எடுத்து சிறிது சிறிதாக தட்டி ,காய்ந்த எண்ணெயில் போட்டு நன்கு சிவக்கும் வரை, திருப்பி போட்டு எடுத்தால் , சுவையான வெங்காய பகோடா தயார்.
No comments:
Post a Comment