EAT WELL LIVE WELL BE WELL

SUNDAL MURUNGAI KATHIRIKAI PULI KULAMBU



        சுண்டல் முருங்கை  கத்திரிக்காய்  புளி குழம்பு                    (எளிய முறை)



தேவையானப்  பொருட்கள் :                     

          கருப்பு  சுண்டல்  : 1 கப்
          முருங்கை காய் : 1
           கத்திரிக்காய் :4
           தக்காளி :2
           புளி :சிறிதளவு
           தேங்காய் :1 கப் (துருவியது )
 மசாலா:சாம்பார்தூள் அல்லது (மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,ஜீரகத்துள், மஞ்சள்தூள்)
            சின்ன வெங்காயம் : 10 TO 15
            பூண்டு :5
            காய்ந்த மிளகாய் :2
            கறிவேப்பிலை :சிறிதளவு
             கடுகு ,வெந்தயம் ,எண்ணெய்  :தேவையான அளவு
             உப்பு 



செய்முறை :
முதல் நாள் இரவே கருப்பு சுண்டலை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்..
இல்லையெனில்
மூன்று மணி நேரத்துக்கு முன்பு வெண்ணீரில் சுண்டலை இட்டு நன்கு மூடி வைக்க வேண்டும்.பிறகு எடுத்து சமைக்கலாம்.
(குறிப்பு : முதல் நாள் சுண்டலை ஊற வைப்பது சுண்டல்  நன்கு மிருதுவாக இருக்கும் )


சுண்டலை  தனியாக வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும் .

1 : வாணலியில் சிறிது நல்லெண்ணய் விட்டு ,எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு வெந்தயம்,கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

2 : பின்பு வெங்காயம் ,பூண்டு ,தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும் .
3 : இவற்றுடன் மிளகாய் தூள் ,மல்லித்தூள் ,ஜீரகத்துள் ,மஞ்சள்தூள்
    (குறிப்பு :இவற்றிக்கு பதில் வீட்டில் அரைத்த சாம்பார் தூள் சேர்த்தி கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.)
4 : வெட்டி வாய்த்த முருகை காய் ,கத்திரிக்காய், ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும்,மூடி வைத்து காய்கள் வேகும் வரை சமைக்க வேண்டும்.
5 : காய்கள் வெந்தவுடன் வேக வாய்த்த சுண்டலை சேர்க்க வேண்டும் .
6 : பின்பு அதனுடன் புளி  கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .மசாலா பச்சை வாசனை போன வுடன் தேங்காய் சிறிதளவு வேகவைத்த சுண்டல் ஆகியவற்றை  நன்கு அரைத்த விழுதை குழம்புடன் சேர்த்து ஒரு கொதி வந்த வுடன் உப்பு   சேர்த்து சரிபார்த்து   இறக்கினால் சுவையான சுண்டல் முருங்கை கத்திரிக்காய் புளி குழம்பு தயார் .

No comments:

Post a Comment

@templatesyard