EAT WELL LIVE WELL BE WELL

URULAI KILANGU MASAL FOR POORI AND DOSAI

உருளை கிழங்கு மசால் (பூரி மற்றும் தோசை )


தேவையான பொருட்கள் :


உருளை கிழங்கு : 4
கேரட் :1
பெரிய வெங்காயம் :2
தக்காளி : 1
பச்சை மிளகாய் :2
மஞ்சள் தூள்:1/4 டேபிள் ஸ்பூன் 
கடலை மாவு அல்லது பஜ்ஜி மாவு:2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை :தேவையான அளவு 
(என்னை,கடுகு,பச்சை கடலை பருப்பு): தேவையான அளவு 
கொத்தமல்லி தழை தேவையான அளவு 
உப்பு 



செய்முறை :



1: உருளை  கிழங்கு மற்றும் கேரட் இவற்றை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும் .
2: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கிய வுடன் சிறிது கடுகு , பச்சைக்கடலை பருப்பு,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
3:இவற்றுடன் நறுக்கிய பெரிய வெங்காயம்(நீளவாக்கில் )சேர்த்து நன்கு வறுத்தல் வேண்டும். 
4:வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள் சேர்த்து பின்பு இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் .
5: இவற்றுடன் வேகவைத்த உருளை கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை மசித்து சேர்க்க வேண்டும் .சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
6:நன்கு வதக்கியவுடன் இதை அப்படியே மசாலா தோசைக்காண மசாலாவாக பயன்படுத்தலாம்.
7: பூரி மசாலாவுக்கு சிறிது தண்ணீரில் கடலை மாவோ அல்லது பஜ்ஜி மாவோ நன்கு கரைத்து அந்த மசாலாவில் சேர்த்தி 2 நிமிடம் கொதித்தவுடன்  உப்பு சரி பார்த்து  கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையை பூரி உருளை கிழங்கு மசால் தயார் .



No comments:

Post a Comment

@templatesyard