EAT WELL LIVE WELL BE WELL

CHICKEN BRIYANI -SEERAGA SAMBA RICE IN PRESSURE COOKER

சிக்கன் பிரியாணி (சீரக சம்பா அரிசியில் )


தேவையான பொருட்கள் :

  • சீரக சம்பா அரிசி : 2 கப் (500 கிராம் )
  • சிக்கன் (நாட்டு கோழி ): 1/2 கிலோ 
  • சின்ன வெங்காயம் : 1 கப் 
  • பெரிய வெங்காயம் : 1 (பெரிது)
  • தக்காளி : 2 (பெரிய அளவு)
  • மிளகாய் தூள் : 4 டேபிள் ஸ்பூன் 
  • மல்லித்தூள் : 2 டேபிள் ஸ்பூன் 
  • கரம் மசாலா : 1 டேபிள் ஸ்பூண் 
  • மஞ்சள்தூள் : 1/4 டேபிள் ஸ்பூன் 
  • பிரியாணி மசாலா தூள் : 1 டேபிள் ஸ்பூன் அல்லது( வீட்டில் அரைத்த கறிமசாலா தூள் 2 டேபிள் ஸ்பூன் ) 
  • இன்ஜி பூண்டு விழுது : 2 டேபிள் ஸ்பூன் 
  • வாசனை பொருட்கள் (பட்டை : 2 ,ஏலக்காய் : 4 ,கிராம்பு : 2 ,பிரிஞ்சி இல்லை : 2 , கல்பாசி (சிறிதளவு ))
  • தயிர் : 2 டேபிள் ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் :2
  • கறிவேப்பிழை : சிறிதளவு 
  • எண்ணெய் ,நெய் :சிறிதளவு 
  • கொத்தமல்லி தழை, புதினா : சிறிதளவு 
  • உப்பு 

செய்முறை : 

  1. ஒரு குக்கரை  அடுப்பில் வைத்து பற்றவைத்து,சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ,வாசனை பொருட்கள் சேர்த்தி வதக்கவும்.அவற்றுடன் பச்சை மிளகாய் ,கறிவேப்பிழை ஆகிய வற்றை சேர்த்தி வதக்கவும்.
  2. இவற்றுடன் இன்ஜி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும் .இவை வதங்கிய வுடன் நறுக்கிய சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் சேர்த்தி நன்கு பொன்னிறமாக வதக்கவும் .
  3. அவற்றில் நறுக்கிய தக்காளி சேர்த்தி , மசாலா தூள்களை(மல்லித்தூள்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா தூள்  ) சேர்த்தி வதக்கவும், மசாலா பச்சை வாசனை போனவுடன் ,சுத்தம் செய்த சிக்கனை சேர்க்கவும்.
  4. சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கவும் , நன்கு வெந்த வுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்தி கிளறிவிடவும் ,நறுக்கிய கொத்தமல்லிக்கு தழை,புதினா சேர்த்தி கிளறவும்.
  5. ஒரு கப் அரிசிக்கு 1/2 கப் தண்ணீர் போதுமானது . 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்தி கலவையுடன் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்,நன்கு கொதித்தவுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்தி கொதிக்க விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
  6. அவ்வபோது மூடி வைத்து ,மூடி வைத்து, கிளறி விடவும்.
  7. அரிசி நன்கு உடையும் பட்சத்தில் குக்கர் மூடி இட்டு விசில் போட்டு மூடி , அடுப்பை சிம் இல் வைத்து 7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். அல்லது ( 6 மற்றும் 7 step களை தவிர்த்து  அரிசியை சேர்த்தவுடன் குக்கர் விசில் போட்டு ,ஒரு விசில் விட்டு இறக்கலாம்).  
சுவையான சிக்கன் பிரியாணி தயார் .

No comments:

Post a Comment

@templatesyard