EAT WELL LIVE WELL BE WELL

THAKKALI THENGAI PAAL BIRIYANI (BASMATHI RICE)

தக்காளி தேங்காய் பால் பிரியாணி (BASMATHI RICE)



தேவையான பொருட்கள்:

  • BASMATHI RICE :1 கப் 
  • தக்காளி : 3(MEDIUM SIZE)
  • பெரிய வெங்காயம்:1
  • தேங்காய் பால் :2 கப் 
  • சின்ன வெங்காயம் :10
  • இஞ்சி :1 துண்டு 
  • பூண்டு :4
  • பச்சை மிளகாய் :2
  • பிரியாணி மசாலா :2 ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் :1/4 டேபிள் ஸ்பூன் 
  • கரம் மசாலா பொருட்கள் (பிரிஞ்சி இல்லை,பட்டை,சோம்பு,கிராம்பு,ஏலக்காய் ) : சிறிதளவு 
  • எண்ணெய் மற்றும் நெய் : 3 டேபிள் ஸ்பூன் 
  • புதினா,கொத்தமல்லி தழை 
  • உப்பு 

செய்முறை :

முதலில் செய்ய வேண்டியவை :

இது 3 பேர் உண்ணும் அளவுக்கான  அளவு.1 கப் BASMATHI அரிசியை 30 நிமிடத்திற்கு முன் ஊற வைக்க வேண்டும்.

சின்ன வெங்காயம் ,இன்ஜி, பூண்டு ,ஒரு சிறிய பட்டை,புதினா ஆகியவற்றை நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும் .

  1. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து நன்கு காய்ந்தவுடன் கரம் மசாலா பொருட்களை சேர்த்து ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. நாம் அரைத்த இன்ஜி,பூண்டு,சின்ன வெங்காயம்,புதினா ,பட்டை விழுதை இவற்றுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. இவற்றுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  4. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.இவை அனைத்தும்  மூடி இட்டு நன்கு வதக்கவும். 
  5. கலவை நன்கு வதங்கிய வுடன் பிரியாணி மசாலா,மஞ்சள் தூள் சேர்த்தி நன்கு கிளறவும் .
  6. ஊறிய BASMATHI அரிசியை ,கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும் (அரிசி உடையாமல் ),எடுத்து வைத்துள்ள தேங்காய் பால்(1 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால்,அல்லது 1 1/2 கப் தேங்காய் பால் 1/2 தண்ணீர் சேர்த்தி கொள்ளலாம் ) சேர்த்தி புதினா கொத்தமல்லித்தழை ,உப்பு சரிபார்த்து,2 விசில் விட்டு இறக்கினால் சுவையான தக்காளி தேங்காய் பால் பிரியாணி தயார். 


2 comments:

  1. Mam... udambu koraikrathuku...podunka mam

    ReplyDelete
    Replies
    1. SURE ROHINI... KOODIYA SEEKRAM DIET RECIPES PUBLISH PANDRE... RECIPES LA SENJU PARTHU COMMENT PANUNGA...

      Delete

@templatesyard