நீர்பூசணிக்காய் பருப்பு குழம்பு
தேவையானப் பொருட்கள் :
- நீர்பூசணிக்காய் : சிறிய துண்டு
- துவரம் பருப்பு : 1 கப்
- தக்காளி : 2
- தேங்காய் துருவியது : 1/2 கப்
- மஞ்சள் தூள் :1/4 டேபிள் ஸ்பூன்
- சாம்பார்த்தூள் : 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் : 7
- பூண்டு : 4
- உப்பு
தாளிப்பு :
தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கேரளா ஸ்டைல் அப்படியே இருக்கும் இல்லையெனில் மற்ற சமையல் எண்ணெய் உபயோகிக்கலாம்): 2 டேபிள் ஸ்பூன்
கடுகு,ஜீரகம்,கறிவேப்பிலை : சிறிதளவு
காய்ந்த மிளகாய் : 2
செய்முறை :
1: முதலில் ஒரு கப் துவரம் பருப்பை தனியாக சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
2: வேறொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நீர்பூசணிக்காய் தக்காளி ,சாம்பரத்துள்,உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும் (காய் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதுமானது)
3: காய் வெந்தவுடன் அதில் வேகவைத்து பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4:அக்கலவை நன்கு கொதித்தவுடன் 1/2 கப் தேங்காய் ,சிறிது ஜீரகம் சேர்த்து நன்கு அரைத்து , சாம்பாருடன் சேர்க்கவும் . தேங்காய் ஊற்றியவுடன் சாம்பார் ஓரிரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.
5: வேறொரு பத்திரத்தில் தளிப்புக்கு தேவையான தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு சேர்த்து, ஜீரகம் சிறிது, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு பொரிந்தவுடன், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும் .
6: இந்த தாளிப்பை சாம்பாருடன் சேர்த்து கலக்கி உப்பு சரி பார்த்து இறக்கினால் சுவையான நீர்பூசணிக்காய் பருப்பு சாம்பார் தயார் .
No comments:
Post a Comment