EAT WELL LIVE WELL BE WELL

BABIES FOOD (3 MONTHS TO 1 YR)

குழந்தைகளுக்கான உணவு முறை 

(ஒரு வயது வரை )

குழந்தை பிறந்தவுடன் 1/2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் .
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது  தண்ணீர் கூட  அவசியம் இல்லை.

6 மாதம் முதல் 8 மாத குழந்தைக்கான உணவு :

  1. காய்கள்,கீரைகள் ஆகியவற்றை  வேகவைத்து அவற்றின் நீரை கொடுக்கலாம். 
  2. காய்கள், கீரைகள் சூப்புடன் உப்பு சேர்த்த வேண்டிய அவசியம் இல்லை .
  3. இந்த சூப்கள் 4 மாத குழந்தைகளுக்கே கொடுக்கலாம் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு . 6 மாதத்திலிருந்து திட உணவுகள்(SOLID) கொடுக்க துவங்கலாம் .காய்களை நன்கு வேகவைத்து மசித்து (VEG PUREE) கொடுக்க வேண்டும் .
  4. அரிசி கஞ்சி,கிழங்கு மசித்தது ஆகியவற்றை கொடுக்க துவங்கலாம்.
  5. பருப்பு வகைகளை இது போல் வேகவைத்து மசித்து கொடுக்க வேண்டும் .
  6. ராகி சிறிதளவு எடுத்து , 8 மணி நேரம் ஊற வைத்து பின்பு நன்கு அரைத்து பால் எடுத்து நன்கு வடிகட்டி , அதில் சிறிதளவு  பனங்கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி  கூல் போல் செய்து கொடுக்கலாம் .
  7. பழ வகைகளையும் சிறிது வேக வைத்தும் ,  சில பழங்களை அப்படியே மசித்தும்  கொடுக்கலாம்.
8 ஆவது மாதத்தில்( nonveg soup )கொடுக்கலாம் .


இவற்றுடன் இரவு நேரத்தில்  குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் .

9 முதல் 12 மாத குழந்தையின் உணவு முறை:

  1. முட்டை குடுக்க துவங்கலாம் ,சிறிது சிறிது நம் உண்ணும் உணவுகளை (இட்லி)போன்றவற்றை சிறிதளவும் கொடுக்க துவங்கலாம்.
  2. ஆட்டு ஈரல் போன்றவற்றை 10 மாதத்திலிருந்து கொடுக்க துவங்கலாம்.
  3. சத்து மாவு கஞ்சி (health mix ) கொடுக்க துவங்கலாம்.
  4. 11 மாதத்திலிருந்து பற்கள் வர தொடங்கினால் ,பழங்கள் ,காய்களை சிறிதளவு திட பொருளாகவே கொடுக்கலாம் .
  5. பாதாம் ,பிஸ்தா, முந்திரி  போன்றவற்றை வீட்டிலேயே மிதமாக வறுத்து , அரைத்து பொடி செய்து கூல் போல் செய்து கொடுக்கலாம்     
           பழ  ஜூஸ் கொடுக்கலாம்.

இவற்றுடன் இரவு நேரத்தில்  குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் .






No comments:

Post a Comment

@templatesyard